சாலையில் சென்ற அரசுப் பேருந்து டயர் வெடித்து விபத்து : கால்வாய்க்குள் பாய்ந்ததால் அலறிய பயணிகள்!!!

Author: Udayachandran
15 September 2021, 7:39 pm
Andhra Bus Upset -Updatenews360
Quick Share

ஆந்திரா : கிருஷ்ணா மாவட்டத்தில் டயர் வெடித்ததால் மின் கம்பத்தில் மோதவிருந்த அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் கால்வாய்க்குள் பாய்ந்தது.

அருகிலுள்ள மின்சாரக் கம்பத்தின் மீது மோதாமல் கால்வாய்க்குள் பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நூஜிவேடுவிலிருந்து கொண்டாபுரம் சென்ற அரசு பேருந்து முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் உள்ள கால் வாய்க்குள் பாய்ந்தது.

அதிர்ஷ்டவசமாக சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதாமல் கால்வாய்க்குள் சென்ற பேருந்துதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பியதாக அங்குள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை மின்கம்பத்தில் மோதி இருந்தால் பேருந்தில் இருந்த அனைவருமே மின்சாரம் பாய்ந்து இறந்திருப்போம் கால்வாய்க்குள் புகுந்ததால் உயிர் பிழைத்தோம் என பயணிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Views: - 167

0

0