இந்தியாவில் அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்க முடிவு? Conditions Apply!!
19 August 2020, 1:03 pmஇந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்கள் முதல் மால், திரையரங்கு, கேளிக்கை விடுதிகளும் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்று மெல்ல குறைந்து வருவதால் அடுத்த மாதம் முதல் திரையரங்குகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் பல கட்டுப்பாடுகளுடன் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் குறைந்த நபர்கள் மட்டும் அமரும் வகையிலும், சமூக இடைவெளியுடன் திரையரங்குகளில் பார்வையாளர்களை அமர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும், அதே போல அந்தந்த மாநிலங்களில் திரையரங்குகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.