திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் : தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு!!

20 April 2021, 8:12 pm
Governor Bunwarilal -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதியில் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் வருகை தந்தார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தான இணை செயல் அதிகாரி பார்கவி வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்து பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர் காரில் திருமலைக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு திருமலையில் தங்கி நாளை காலை ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார்.

Views: - 79

0

0