அரசு வேலை அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே..! மத்திய பிரதேச முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

18 August 2020, 3:57 pm
Chouhan_UpdateNews360
Quick Share

உள்ளூர் மக்களுக்கு அரசு வேலைகளை வழங்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தெரிவித்தார். மாநிலத்தின் வளங்கள் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.

“மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு அரசாங்க வேலைகள் வழங்கப்படும் என்று மாநில அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மத்திய பிரதேசத்தின் வளங்கள் மாநில குழந்தைகளுக்கானது” என்று சவுகான் வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்ட விதிகளை அவர் விரிவாகக் கூறவில்லை. தனது சுதந்திர தின உரையில், சவுகான் அரசாங்க வேலைகளில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

10 மற்றும் 12 வகுப்புகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான ஒரு செயல்திட்டத்தை தனது அரசாங்கம் உருவாக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

முன்னதாக, முந்தைய கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் தொழில்துறை பிரிவுகளில் 70 சதவீத வேலைகளை உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.