டிசம்பர் 1 முதல் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கா..? மத்திய அரசின் முடிவு என்ன..?

13 November 2020, 1:14 pm
lockdown_Updatenews360
Quick Share

தற்போதைய திருவிழா சமயத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நாடு தழுவிய பூட்டுதலை மீண்டும் திணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

“கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் கட்ட ஊரடங்கை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்திய அரசு இதைப் பின்பற்றுமா?” என ஒரு இந்தி தொலைக்காட்சி சேனலின் ட்வீட்டில் கேட்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த டிசம்பர் 1 முதல் முழுமையான ஊரடங்கை அரசாங்கம் அறிவிக்கும் என்று கூறியுள்ளது.

எனினும், மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி), மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு பற்றிய செய்திகளை போலியான செய்தி என அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அது கூறியது.

இந்தியாவில் ஒரே நாளில் 47,905 நோய்த்தொற்றுகள் அதிகரித்து நாட்டின்  நோய்த்தொற்றுக்களின் எண்ணிக்கையை 86,83,916’ஆக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் நோயிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 80,66,501’ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Views: - 17

0

0