COVID 19 தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நேர்ந்த முதல் உயிரிழப்பு: உறுதி செய்தது அரசு அமைப்பு!

16 June 2021, 10:23 am
Govt's AEFI panel confirms first death after COVID-19 vaccination in India
Quick Share

தமிழகத்திலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி என்பது காலத்தின் கட்டாயமாகி போன நிலையில், தடுப்பூசி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இது போன்ற பல வதந்திகள் பரவி வரும் நிலையில் மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக இப்போது ஒரு உண்மையான அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை AEFI என்ற அரசாங்க அமைப்பு வெளியிட்டுள்ளது. 

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் கடுமையான விளைவுகளை ஆராய மத்திய அரசு குழு ஒன்றை நியமனம் செய்தது. AEFI என அழைக்கப்படும் இந்த குழு ஒரு முக்கிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் முதல் உயிரழப்பு நேர்ந்ததாக மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மருத்துவர் NK அரோரா அவர்களின் தலைமையிலான இந்த AEFI குழு, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்படுபவர்களுக்கு, உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை மற்றும் இரத்த உறைவு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

அதன்படி ஆராய்ந்து அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 8 ஆம் தேதி, 68 வயதான ஒரு நபருக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அந்த அலர்ஜி கடுமையாகவே அவர் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மேலும் மூன்று பேர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், தற்போது, ​​மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நபரின் மரணம் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சோதனை மேற்கொள்ளப்பட்ட மூவரில் ஒருவரின் உயிரிழப்புக்கு தடுப்பூசி தயாரிப்புகள் தொடர்புடைய பக்க விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மற்ற இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் மரணம் நிகழ்ந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விருவருக்கும் 20 வயதுக்கு மேல் தான் ஆகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AEFI என அழைக்கப்படும் இந்த அரசு அமைப்பு, மொத்தம் 31 பேர் உயிரிழந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ததது. இந்த 31 இறப்புகளில், 18 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நிகழ்ந்துள்ளன. என்றாலும் இந்த இறப்புகளுக்கான காரணம் தடுப்பூசி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அவர்களில் ஏழு பேரின் இறப்புக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்பட முடியாதவையாக உள்ளதென்றும் இருவரின் இறப்புக்கான காரணம் வகைப்படுத்தப்பட முடியாதவையாக இருக்கிறது என்றும் ஆய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலரும் நம்பிக்கையுடன் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு வரும் நிலையில், இப்படி ஒரு உண்மையான தகவலை அரசு அமைப்பு வெளியிட்டுள்ளது மக்களுக்கு குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 322

0

0