உயிராய் நேசித்த விளையாட்டே உயிரை பறித்த சோகம் : கபடியில் உயிரை விட்ட பட்டதாரி இளைஞர்!!

17 January 2021, 2:35 pm
Kabaddi Player Dead -Updatenews360
Quick Share

ஆந்திரா : தான் உயிருக்கு உயிராக நேசித்த கபடி விளையாட்டு போட்டியால் பட்டதாரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கங்கன்ன பள்ளியில் இன்று மாவட்ட அளவில் ஆன கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் அதே பகுதியை சேர்ந்த எம்.காம் பட்டதாரி நரேந்திராவும் தன்னுடைய அணியுனருடன் கலந்து கொண்டு விளையாடினார்.

அப்போது கபடி ஆடிய அவரை மடக்கிய எதிரணியினர் அவர் மேல் விழுந்து பிடித்தனர். சற்றுநேரத்தில் அவரிடமிருந்து வந்த கபடி, கபடி என்ற சத்தம் நின்று போனது. எனவே அவரை எதிரணியினர் விட்டுவிட்டனர்.

அப்போது அங்கிருந்து எழுந்து நரேந்திரா சுமார் இரண்டடி தூரம் நடந்து மயங்கி சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அவரை அங்கிருந்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நரேந்திரா உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவித்தனர் .நரேந்திரா கபடி ஆடுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0