#OurTeachersOurHeroes : தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து..!

5 September 2020, 10:31 am
pm_modi_updatenews360
Quick Share

ஆசிரியர் தின மான இன்று ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, சிந்தனையை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் அவர்கள் செய்த பங்களிப்புக்கு மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“நம் தேசத்தின் புகழ்பெற்ற வரலாற்றுடன் எங்கள் தொடர்பை ஆழமாக்குவதற்கு எங்கள் அறிவுள்ள ஆசிரியர்களை விட சிறந்தவர் யார். சமீபத்திய மான்கிபாத்தின் போது, நம் மாபெரும் சுதந்திர போராட்டத்தின் அறியப்படாத அம்சங்களைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் யோசனையை நான் பகிர்ந்து கொண்டேன். #OurTeachersOurHeroes.” என்று மோடி ட்வீட் செய்துள்ளார். 

மேலும் கடந்த மாத ‘மான்கிபாத்’ ஒளிபரப்பில் அவர் ஆற்றிய உரையின் கிளிப்பையும் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணனை நினைவு கூறும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5’ஆம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 47 பேருக்கு நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்பட உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பனி புரியும் இரண்டு ஆசிரியர்களும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Views: - 11

0

0