சேலை கட்டி மணமகள் கோலத்தில் வந்த மாப்பிள்ளை…மணமகன் கெட்டப்பில் பெண்: ஆந்திராவில் நடந்த அதிசய திருமணம்..!!

Author: Aarthi Sivakumar
29 June 2021, 11:22 am
Quick Share

ஆந்திரா: மணமகள் மணமகன் கோலத்திலும் மணமகன் மணமகள் கோணத்திலும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.வெறுமனே ஆணும், பெண்ணும் இணையும் நிகழ்வாக அன்றி, வாழ்வின் ஒப்பற்ற தொடக்கமாகவே திருமணம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற விநோத முறையிலான திருமணம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் இந்த அதிசய திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமகன் மணமகள் கோலத்திலும், மணமகள் மணமகனைப் போலவும் தயாராகி, திருமண சடங்குகள் நிறைவேற்றப் பட்டதே இதற்குக் காரணம். இந்தப் பகுதியில் மர்காபுரம் மண்டலம், தரிமடுகு, குரிச்செடு மண்டலம், தேஷினேனி பல்லி, அர்த்தவீடு மண்டலம், மாவுட்டூர், கம்பம் மண்டலம், ஜங்கங்குண்ட்லா கிராமங்களில், குலதெய்வ முறைப்படி நிச்சயம் செய்த தம்பதியின,ர் திருமண நாளில் மணமகன் மணமகள் கோலத்திலும் மணமகள் மணமகன் கோலத்திலும் உடை அணிந்து வந்து, குலதெய்வ கோவில் முன்பாக திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

பாரம்பரியமாக பல்வேறு ஆண்டுகளாக இந்த முறையை அந்த கிராம மக்கள் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும்.

நாட்டில் எவ்வளவு நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கிராமங்களில் இதுபோன்ற திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமணம் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 293

0

0