‘கட்டுனா அத்தான மட்டும் தா கட்டுவ‘ : ஒரே நேரத்தில் இரண்டு அத்தை மகள்களுடன் திருமணம்.. 90ஸ் கிட்ஸ்களின் சாபம் சும்மா விடுமா..?

19 June 2021, 6:54 pm
Two Wives - Updatenews360
Quick Share

தெலுங்கானா : அத்தை மகள்கள் இரண்டு பேரை ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில் இருமண பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய மணமகனை பார்த்து 90ஸ் கிட்ஸ் வயித்தெரிச்சலில் உள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் மண்டலம் கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்த அர்ஜுன் தனது செல்போன் மூலம் தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி ஆகியோருடன் பேசியுள்ளார்.

வீட்டில் சும்மா இருக்கும் போதெல்லாம் மாறி மாறி இருவருக்கும் செல்போனில் பேச, அத்தான் மீது இருவருக்கு பிரியமாகி, சினேகமாகி காதல் வந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இரு அத்தை மகள்களுக்கும் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் தெரியாமல் காதல் வலை வீசியுள்ளார்.

அவர் வீசிய காதல் வலையில் இரண்டு அத்தை மகளும் சிக்கினர். தொடர்ந்து 3 ஆண்டுகளாக இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார். இந்நிலையில் இரண்டு குடும்பத்தாருக்கும் இந்த முக்கோன காதல் காதல் விவகாரம் தெரிந்த நிலையில் மூன்று குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆதிவாசியினர் என்பதால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீற முடிவெடுத்தனர்.

இரண்டு அத்தை மகள்களும் பிடிவாதமாக அர்ஜுனனை மணக்க ஆசைப்பட்டதால் ஆதிவாசிகளான அவர்களது பாரம்பரியமான வாழ்க்கை முறையை மாற்றி முதல் முறையாக இரு பெண்களையும் ஒரே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனை அடுத்து இவர்களது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மணமகளுக்கு தாலி கட்டிய அவர் தற்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்.

மணமகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஒரே நேரத்தில் இரண்டு பேரை ஒருவர் கை பிடித்தது அப்பகுதி மட்டுமல்லாது 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 216

0

0