அடுத்த மாதம் முதல் கிரைண்டர், எல்இடி பல்ப்புக்கான ஜிஎஸ்டி அதிகரிப்பு… ஆன்லைன் சூதாட்டத்திற்கு வரி உயர்த்துவது குறித்தும் முக்கிய முடிவு..!!

Author: Babu Lakshmanan
29 June 2022, 7:03 pm
Quick Share

கிரைண்டர், எல்இடி பல்ப்புகள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் கடந்த 2 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கிரைண்டர், அரிசி அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5ல் இருந்து 18 சதவீதமாகவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும், எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சூரிய சக்தி ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி 5ல் இருந்து 12 சதவீதமாகவும், கத்தி, பேனா, பிளேடு , ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும், மீத்தேன் மீதான ஜிஎஸ்டி 5ல் இருந்து 12 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :- சூதாட்டம், லாட்டரி, ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் நடக்கும். சரக்கு போக்குவரத்திற்கான வரியை குறைக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது, எனக் கூறினார்.

Views: - 384

0

0