கொலையை விபத்து போல் செட்டப் செய்த கணவன்..! ₹60 லட்சம் பணத்திற்காக மனைவியைக் கொன்றது அம்பலம்..!

Author: Sekar
7 February 2021, 4:37 pm
Gujarat_Women_Murder_Insurance_Claim_UpdateNews360
Quick Share

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆடிட்டர் ஒருவர், தனது மனைவியைக் கொன்று சாலை விபத்து போல செட்டப் செய்த சம்பவம் அம்பலமானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 26’ஆம் தேதி,  தக்ஷ்பென் டேங்க் என அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் வாகனம் மோதி இறந்ததால் தற்செயல் மரணம் என போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆனாள் பின்னர் உறவினர்கள் சில சந்தேகங்களை எழுப்பிய பின்னர், போலீஸ் இது குறித்து விசாரணையைத்தொடங்கியுள்ளது.

பில்டி காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு மற்றும் அழைப்பு தரவு பகுப்பாய்வு மூலம், அவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டறிந்துள்ளது. 

அவரது கணவர் லலித் டேங்க் கிரித் மாலிக் எனும் நபருக்கு ரூ 2 லட்சம் கொடுத்து இந்த கொலையை ஒரு விபத்து போல மாற்றியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவி பெயரில் எடுக்கப்பட்ட பாலிசியில் இருந்து ரூ 60 லட்சம் காப்பீடாக பெறுவதற்காக அவர் மனைவியை விபத்து போல செட்டப் செய்து கொன்றுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

“டிசம்பர் 26’ஆம் தேதி காலையில், லலித் தனது மனைவியை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநருடன் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டார். நடைபயிற்சி செய்யும் போது தான் கணிசமான தூரத்தை பராமரிப்பதை லலித் உறுதிசெய்தார். வாகனம் தக்ஷ்பனை அதிவேகமாக தாக்கி, சம்பவ இடத்திலேயே கொன்றது.” என காவல்துறை அதிகாரி கூறினார்.

இந்த கொலையில் தொடர்புடைய ஓட்டுநர் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வரும் வேளையில் லலித் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Views: - 54

0

0