காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பதற்றம்: பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை..!!

11 May 2021, 10:05 am
kashmir_shelling_updatenews360
Quick Share

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் உள்ள கோமர்நாக் அருகே வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த இடத்துக்குச் சென்று காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருவதாக காஷ்மீர் காவல்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 193

0

0