சொந்தமாக தொழில் செய்ய நண்பனாக பழகிய ஜிம் மாஸ்டர் : தங்கம், வெள்ளி, பணம் கொள்ளையடித்து பதுக்கல்..அதிர வைத்த ROBBERY!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 2:38 pm
Gym Master Robbery - Updatenews360
Quick Share

திருப்பதி : இரண்டு வீடுகளில் கொள்ளை போன 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்த போலீசார் ஒருவனை கைது செய்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் உள்ள ஐராலா நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு வீட்டிலும், இந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி ஒரு வீட்டிலும் இருந்த தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன.

இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருப்பதி போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது கொள்ளை போன இரண்டு வீடுகளுக்கும் நண்பனாக வந்து சென்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்தது சுரேஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். பின்னர் அவனுடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 610 கிராம் தங்க ஆபரணங்கள், பதிமூன்று கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த நான் உடற்பயிற்சி கூடம் ஏற்பாடு செய்து அதன் மூலம் பிழைப்பு நடத்த முடிவு செய்தேன்.

அதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லாத காரணத்தால் கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்து இரண்டு வீடுகளிலும் கொள்ளை அடித்தேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.

Views: - 779

0

0