“அப்பவே சொன்னேன் கேட்டீங்களா”..! சச்சின் வேஸ் விவகாரத்தை போட்டுடைத்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்..!

Author: Sekar
29 March 2021, 5:57 pm
sanjay_raut_updatenews360
Quick Share

தற்போது என்ஐஏ காவலில் இருக்கும் மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வேஸ் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று சிகட்சித் தலைவர்களை எச்சரித்ததாக சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று தெரிவித்தார்.

சச்சின் வேஸ் விவகாரம் மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கத்திற்கு சில பாடங்களைக் கற்பித்ததாகவும் ரவாத் கூறினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் ஆகியவை மகா விகாஸ் அகாதி எனும் பெயரில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

முன்னதாக, பிப்ரவரி 25’ஆம் தேதி தெற்கு மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்திற்கு அருகில் வெடிபொருள் நிறைந்த எஸ்யூவியை நிறுத்திய வழக்கில் சச்சின் வேஸ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இந்த மாத தொடக்கத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

குவாக்கா யூனுஸ் குற்றம் சாட்டப்பட்ட கட்கோபர் குண்டு வெடிப்பில் 2004’ஆம் ஆண்டில் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். எனினும் சிவசேனாவுடனான நெருக்கத்தால் கடந்த ஆண்டு மீண்டும் மாநில காவல்துறையில் சேர்க்கப்பட்டார்.

“சச்சின் வேஸை மகாராஷ்டிரா போலீஸ் படையில் மீண்டும் சேர்க்கும் திட்டம் விவாதத்தில் இருந்தபோது, ​​அவர் எங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என்று சில தலைவர்களிடம் வலியுறுத்தினேன். அவரது நடத்தை மற்றும் வேலை செய்யும் முறை அரசாங்கத்திற்கு சில தொல்லைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தேன்.” என்று சஞ்சய் ராவத் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 

எனினும் சஞ்சய் ராவத் தான் இது குறித்து வலியுறுத்திய தலைவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று கூறினார். ஆனால் அவர்களுடனான  எனது உரையாடலை அவர்கள் நன்கு அறிவார்கள் என மேலும் கூறினார்.

தான் கடந்த பல ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராக இருந்து வருவதால் வேஸ் பற்றி தெரியும் என்று சஞ்சய் ராவத் கூறினார். அவர் ஒரு நபர் மோசமானவர் அல்ல என்றாலும், சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அவரை அவ்வாறு செய்ய வைக்கிறது என சஞ்சய் ராவத் கூறினார்.

“சச்சின் வேஸின் நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளின் இந்த முழு சம்பவமும் மகா விகாஸ் அகாதி அரசாங்கத்திற்கு நல்ல பாடம் ஒன்றை கற்பித்தது. அந்த வகையில் இது நல்லதுதான். எங்களுக்கு சில படிப்பினைகளை கற்றுக் கொடுத்தது.” என்று அவர் மேலும் கூறினார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை ஆதரித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, வேஸ் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் போதுமான தகவல்கள் இல்லை என்று கூறினார்.

“முதலமைச்சர் அவருக்கு ஆதரவளித்தார், ஆனால் வேஸின் நடவடிக்கைகள் வெளிவந்த நிலையில், அதிகாரியைக் காப்பாற்ற எந்த காரணமும் இல்லை.” என்று அவர் கூறினார்.

Views: - 76

0

0