முறையாக சேகரிக்கப்படாத நடிகைகளின் தலைமுடி மாதிரிகள்…..திருப்பி அனுப்பிய மத்திய தடயவியல் ஆய்வகம்

By: Aarthi
3 October 2020, 2:21 pm
cbi hydrabath - updatenews360
Quick Share

போதைப்பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகளின் தலைமுடி மாதிரிகள் உரிய முறையில் சேகரிக்கப்படவில்லை என மாதிரிகளை மத்திய தடயவியல் ஆய்வகம் திருப்பி அனுப்பியுள்ளது.

நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி உள்ளிட்ட 3 பேர் போதை பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்யும் வகையில், அவர்களது தலைமுடி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்துக்கு தலைமுடி மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மத்திய தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் உரிய முறையில் சேகரிக்கப்படவில்லை எனவும், மேலும் அவை தலைமுடியின் உரிய பகுதியில் சேகரிக்கப்படவில்லை எனவும் கூறி அவற்றை ஐதராபாத் தடயவியல் ஆய்வகம் திருப்பி அனுப்பியுள்ளது.

Views: - 37

0

0