நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பம்: ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!!

Author: Aarthi Sivakumar
7 September 2021, 10:52 am
Quick Share

சென்னை: நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.

தேர்வர்கள் www.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Views: - 345

0

0