அரியானா கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி : தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்க வேண்டுகோள்..!

9 September 2020, 4:48 pm
haryana-education-minister-kanwar-pal-updatenews360
Quick Share

சண்டிகர் : அரியானா கல்வித்துறை அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராடும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், அரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பாலுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” எனக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்,” எனக் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் விரைந்து குணமடைய வேண்டும் என முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0