மத்திய சுகாதார அமைச்சரின் தாய் மரணம்..! கண்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம்..!

6 September 2020, 4:04 pm
harsh_vardhan_mother_updatenews360
Quick Share

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று தன்னுடைய தாயின் மறைவுக்குப் பிறகு, எய்ம்ஸில் தனது தாயின் கண்களை தானம் செய்துள்ளார். ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் இதை அவர் உறுதிப்படுத்தினார். 
ஹர்ஷவர்தனின் 89 வயதான தாய் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இன்று காலமானார்.

“பூமியில் என் அன்புக்குரிய நபர், என் அம்மா. பரலோக வாசஸ்தலத்திற்கு புறப்பட்டுவிட்டார் என்று தெரிவிக்கையில் மனம் உடைந்தது. 89 வயதான அவர் இன்று காலை இருதய நோயால் பாதிக்கப்பட்டார். ஒரு உயர்ந்த ஆளுமை, என் வழிகாட்டி மற்றும் தத்துவஞானி, அவர் என் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை விட்டுவிட்டார். அவருடைய பக்தியுள்ள ஆத்மா அமைதியைக் காணட்டும்.” என்று அவர் காலையில் ட்வீட் செய்திருந்தார்.  

இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்பது தனது தாயின் விருப்பம் என்று ஹர்ஷவர்தன் கூறினார். “அவரது விருப்பப்படி, அவரது மறைவுக்குப் பிறகு எய்ம்ஸில் அவரது கண் தானம் செய்யப்பட்டது.” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்காக அவர் 3 மணியளவில் தாயின் உடலை மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதாகவும் ஹர்ஷவர்தன் கூறினார்.

அமைச்சர் ஒரு தனிப்பட்ட குறிப்பையும் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தனது தாயை தனது வழிகாட்டியாக இருந்த ஒரு உயர்ந்த ஆளுமை என்று குறிப்பிட்டார். அவரது மரணம் தன்னுடைய வாழ்க்கையில் எவராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0