அரியானாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு :கடைகள் மாலை 8 மணி வரை இயங்க அனுமதி

20 June 2021, 9:18 pm
kerala_lockdown_updatenews360
Quick Share

அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், தொற்று பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த மாநிலங்கள், தற்போது பாதிப்பு குறையத்தொடங்கியதையடுத்து, படிப்படியாக தளர்த்தத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், அரியானாவிலும் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் உள்பட அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 136

0

0