அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.6-வரை நீட்டிப்பு
Author: kavin kumar22 August 2021, 11:02 pm
அரியானா: அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளன. அந்த வகையில், அரியானாவிலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.தற்போது அமலிலுள்ள ஊரடங்கு வரும் 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் 15 நாட்கள் அதாவது செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது. தொற்று குறைந்து வருவதால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
- பார்கள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி.
- சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றினால் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.
- கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்களை திறக்கலாம்.
- உள்ளரங்கங்களில் 50 சதவீதம் வரை மட்டுமே நபர்களை அனுமதிக்கலாம். உள்ளரங்கங்களில் அனுமதிக்கான உச்சவரம்பு 100 நபர்கள், திறந்தவெளி அரங்கங்களில் உச்சவரம்பு 200 நபர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் நுழைவுத்தேர்வு மற்றும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தலாம்.
Views: - 328
0
0