லவ் ஜிகாத்துக்கு எதிராக சிறப்பு சட்டம்..! ஹரியானா அமைச்சர் அதிரடி..!

1 November 2020, 4:20 pm
anil_vij_updatenews360
Quick Share

லவ் ஜிகாத்துக்கு எதிராக ஹரியானா அரசாங்கம் ஒரு சட்டத்தை உருவாக்கி வருகிறது என்று உள்துறை அமைச்சர் அனில் விஜ் இன்று கூறினார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அரசாங்கம் லவ் ஜிகாத்தை சமாளிக்க ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்த ஒரு நாள் கழித்து ஹரியானாவும் அறிவித்துள்ளது.

“ஹரியானா லவ் ஜிஹாத்துக்கு எதிரான சட்டத்தைப் பற்றி ஆலோசித்து வருகிறது” என்று விஜ் இந்தியில் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று யோகி ஆதித்யநாத் தனது அரசாங்கம் லவ் ஜிகாத்தை தடுக்க  ஒரு சட்டத்தை கொண்டு வருவதாகக் கூறியதோடு, மகளையும் சகோதரிகளையும் மதிக்காதவர்களை இந்துக்களின் இறுதிச் சடங்கில் கூறப்படும் “ராம் நாம் சத்யா ஹை’ என்ற வார்த்தைகளைக் கூறி எச்சரித்துள்ளார்.

லவ் ஜிகாத்தில் சம்பந்தப்பட்டவர்களின் சுவரொட்டிகள் பொது இடங்களில் வைக்கப்படும் என்று அவர் கூறினார். முஸ்லீம்கள் இந்து சிறுமிகளை காதல் என்ற போர்வையில் இந்து பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யும் நடவடிக்கையை இந்து உணர்வாளர்கள் லவ் ஜிகாத் என அழைக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மற்றும் தியோரியாவில் தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், திருமணம் என்ற ஒரே காரணத்திற்காக மதம் மாறுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார்.

கடந்த வாரம், 21 வயதான கல்லூரி மாணவி நிகிதா, ஹரியானாவின் பல்லப்கரில் ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக அந்த நபர் இஸ்லாத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்தப் பெண்ணின் கொலை லவ் ஜிகாத் வழக்கு என்று சில இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து லவ் ஜிகாத் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

“ஒரு திறமையான இளம் பெண், இஸ்லாமிய ஜிகாதிகளால் ஒரு பொது இடத்தில், பகல் நேரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த இழப்பைச் சுமப்பது மிகவும் கடினம்” என்று வி.எச்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் அலோக் குமார் மேற்கோளிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க ஹரியானா அரசு மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான தவுசிப் மற்றும் ரெஹான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்து வருவதால், உத்தரப்பிரதேசத்தைப் பின்பற்றி லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

Views: - 28

0

0

1 thought on “லவ் ஜிகாத்துக்கு எதிராக சிறப்பு சட்டம்..! ஹரியானா அமைச்சர் அதிரடி..!

Comments are closed.