தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து..! ஹரியானா அரசு அதிரடி முடிவு..!

4 November 2020, 12:17 pm
electricity_updatenews360
Quick Share

ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மாநிலத்தில் அதிகமான தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக ஹரியானா எண்டர்பிரைசஸ் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை 2020’இன் (ஹெச்இஇபி) கீழ் 20 ஆண்டுகளுக்கு மின்சார கட்டணத்தில் விலக்கு அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ள கூறினார். 

முன்னதாக, இந்த விலக்கு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காரணமாக தொழில்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தவிர, உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ 48,000 மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொருட்கள் மற்றும் சேவை வரிக்கு பதிலாக முதலீட்டாளர்களுக்கு 100 சதவீத முதலீட்டு மானியத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நன்மைகளை வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஒரு அறிக்கையில், நெல் வைக்கோல் மற்றும் பிற பயிர்களின் எச்சங்களை நிர்வகிப்பதற்காக தொழில்களுக்கு இந்த கொள்கையில் சிறப்பு விலக்கு அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஹெச்இஇபி’யின் வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டு விரைவில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா 

Views: - 18

0

0