ஹத்ராஸ் வழக்கு..! சிறப்பு விசாரணைக் குழுவின் காலக்கெடு நீட்டிப்பு..! யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

Author: Sekar
7 October 2020, 1:19 pm
Hathras_UpdateNews360
Quick Share

உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் கீழ் உள்துறைச் செயலாளர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) ஹத்ராஸ் வழக்கில் விசாரணையை முடிப்பதற்கு மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு கிடைத்துள்ளது.

சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்க விதிக்கப்பட்ட ஏழு நாட்கள் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் காலக்கெடு நீட்டிப்பு வழங்குமாறு எஸ்ஐடி அரசிடம் கோரியது. இதையடுத்து 10 நாள் நீட்டிப்புக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, எஸ்ஐடியின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரையின் அடிப்படையில், ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) விக்ராந்த் வீர் உள்ளிட்ட ஐந்து போலீசாரை சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும், இறுதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பதாக எஸ்ஐடி அப்போது கூறியிருந்தது.

சமீபத்திய புதுப்பிப்பில், இந்த வழக்கில் அவர்கள் பல்வேறு அம்சங்களை சரிபார்க்க வேண்டும் என்றும், அக்டோபர் 17 அன்று இறுதி முடிவு அறிக்கையை தருவதாகவும் எஸ்ஐடி கூறியது.

எஸ்ஐடி முழு வழக்கையும் விசாரித்து சம்பவங்களின் வரிசையை உறுதிப்படுத்துகிறது. குடும்பத்தின் அனுமதியின்றி உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 29 வரை நடந்த அனைத்து விசயங்களும் அதில் வெளிவந்தன.

இரு தரப்பிலிருந்தும் பல்வேறு முரண்பாடுகள், உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்கள் உள்ளன என்று உ.பி. அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்புடைய அனைத்து நபர்களின் அறிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் ஒரு சில ஆவண சான்றுகள் இன்னும் சேகரிக்கப்படவில்லை. அதனால்தான் எஸ்ஐடி காலக்கெடுவை நீட்டிக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது.

Views: - 37

0

0