பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது..! பீகார் காங்கிரசில் வலுக்கும் எதிர்ப்பு..!

Author: Sekar
7 October 2020, 10:51 am
Congress_Flag_UpdateNews360
Quick Share

பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட தற்போது ஹத்ராஸ் வழக்கின் தாக்கம் உணரப்படுகிறது. ஹத்ராஸ் விவகாரம் காரணமாக வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அறிவிப்பதை காங்கிரஸ் ஒத்திவைத்தது. அதன் சில முக்கிய தலைவர்கள் களங்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சீட் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

காங்கிரஸ் தேர்தல் குழு தனது வேட்பாளர்களின் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. இந்த தாமதத்திற்கு ஒரு காரணம் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிரஜேஷ் பாண்டே போன்ற சில வேட்பாளர்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர். 

ஹத்ராஸ் விவகாரம் மிகப்பெரிய அளவில் காங்கிரசால் கையிலெடுக்கப்பட்டு வரும் நிலையில், பல தலைவர்களிடமிருந்து, குறிப்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் போன்றவர்கள் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹர்னாட், சுல்த்கஞ்ச், ஹிசுவா மற்றும் தேகாரி தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கான தேர்வுகள் இதேபோன்ற காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சீட் கொடுத்தால் அது வாக்காளர்களிடமிருந்து மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும் என கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களுக்கு கட்சி சீட் வழங்கக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தாரிக் அன்வர், சுஷ்மிதா தேவ் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

கட்சி களமிறங்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேவ் கடுமையாக வாதிட்டு வருகிறார். களங்கமில்லாதவர்களுக்கு மட்டுமே கட்சி சார்பாக சீட் வழங்க தலைவர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி ஊடகங்களுடன் பேசியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதால், கட்சியின் மூத்த தலைவர்கள், கறைபடிந்த தலைவர்களுக்கு டிக்கெட் வழங்குவது பூமராங் ஆக மாறும் என்று கருதுகின்றனர்.

பீகாரில் அதிக தாக்கம் செலுத்தும் நிலையில் காங்கிரஸ் இல்லையென்றாலும், இது தனக்கான வாய்ப்பைப் பறிக்க விரும்பவில்லை. மாறாக, அது மாநிலத்தில் தன்னைத் தூய்மைப்படுத்த விரும்புகிறது. இதன் மூலம் மாநிலத்தில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

Views: - 42

0

0