ஹத்ராஸ் விவகாரம்..! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு..! யோகி ஆதித்யநாத் அதிரடி..!

Author: Sekar
6 October 2020, 5:02 pm
hathras_case_updatenews360
Quick Share

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வெளியே காவல்துறையை பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளது. முன்னதாக தொடர்ந்து அச்சுறுத்தல் வந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பம் அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரியதை அடுத்து யோகி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் இரண்டு பெண் துணை ஆய்வாளர்கள் மற்றும் ஆறு பெண் கான்ஸ்டபிள்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் பாதுகாப்புக்காக இரண்டு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநில ஆயுதமேந்திய காவலர்களும் வீட்டிற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.

இது தவிர, 15 போலீசார், மூன்று ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கிராமத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தங்கள் பாதுகாப்பிற்கு அஞ்சுவதாக பலமுறை கூறியிருந்தனர். அவர்கள் கிராமத்தை விட்டு வேறு இடங்களில் குடியேற விரும்புகிறார்கள் என்று கூட கூறியிருந்தார்கள்.

“வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்படுகிறோம். வரும் நாட்கள் எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.” என்று பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கூறினார்.

Views: - 47

0

0