உ.பி., மேற்குவங்கத்தில் எங்கள் வெற்றிக்கு உதவுவார்..! ஒவைசி குறித்து பாஜக எம்பி கருத்து..!

14 January 2021, 1:59 pm
sakshi_maharaj_updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தலில் போட்டியிட ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி எடுத்த முடிவு பாஜக வெற்றிக்கு உதவும் என்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார்.

“இது கடவுளின் கிருபை. கடவுள் அவருக்கு பலம் அளிக்கட்டும். அவர் பீகாரில் எங்களுக்கு உதவினார். மேலும் மேற்கு வங்கத்திலும் பின்னர் உத்தரபிரதேசத்திலும் எங்களுக்கு உதவுவார்.” என்று உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மக்களவை எம்.பி.யான சாக்ஷி மகாராஜ் கூறினார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்திறனைக் கண்டு உற்சாகமடைந்த ஒவைசி மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேச தேர்தல்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அதே வேளையில், நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 2022’இல் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர்-நவம்பர் 2020’இல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி, முஸ்லீம் ஆதிக்கம் செலுத்தும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் ஐந்து இடங்களை வென்றது. மேலும் ஒவைசி கட்சி, எதிர்க்கட்சிக்குச் செல்லும் முஸ்லீம் வாக்குகளை குறைத்து, பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றிக்கு வழிவகுத்தார் எனவும் அவரை பாஜகவின் பி டீம் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.

உத்தரபிரதேசத்தில் 2020 டிசம்பரில், ஒவைசி சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்.பி.எஸ்.பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை சந்தித்து உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார். “நாங்கள் இப்போது ராஜ்பரின் கூட்டணியில் ஒரு பகுதியாக இருக்கிறோம்” என்று ஒவைசி அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0