கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒரே நாளில் உயிரிழப்பு..! உத்தரபிரதேசத்தில் பரபரப்பு..! காரணம் என்ன..?

18 January 2021, 4:46 pm
Corona_Vaccination_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற ஒரு நாள் கழித்து, 46 வயதான சுகாதார பணியாளர் மகிபால் இறந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தடுப்பூசி மூலம் தான் அவர் மரணமடைந்தார் என மகிபாலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர் இதய நோயால் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் மொராதாபாத் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கடந்த சனிக்கிழமை தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகிபாலின் மகன் விஷால், அவரது தந்தை சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

“என் தந்தைக்கு இருமல் இருந்தது. ஆனால் தடுப்பூசிக்குப் பிறகு அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். நேற்று அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இரவில் இறந்தார்” என்று விஷால் கூறினார்.

இந்நிலையில் தலைமை மருத்துவ அதிகாரி மிலிந்த் சந்தர் கார்க் ஒரு பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி, இறப்புக்கான காரணம் இருதய நோய் என்று கூறினார்.

“மகிபால் ஒரு இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.” என்று அவர் மேலும் கூறினார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு சில ஊழியர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது. ஆனால் வேறு எந்த பக்க விளைவுகளையும் பற்றிய அறிக்கைகளை மறுத்தது.

சுகாதார அதிகாரிகளின் கூற்றை மறுத்து, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அவர் ஒருபோதும் இருதய பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை என்றும் காய்ச்சல் மற்றும் இருமல் தவிர அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் மரணத்தை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று மொராதாபாத் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் சிங் தெரிவித்தார்.

“மகிபாலின் வழக்கு விதிவிலக்கானது மற்றும் உயர் மட்ட மருத்துவ விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று அவர் உறுதியளித்துள்ளார்.

Views: - 11

0

0