குவியல் குவியலாக கிடந்த குரங்கு சடலங்கள் : விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!!

Author: Udayachandran
30 July 2021, 5:32 pm
Monkeys Dead -Updatenews360
Quick Share

கர்நாடகா : பெங்கரூவில் சுமார் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஹசன் மாவட்டத்தில் சக்லேஷ்பூர் என்னும் பகுதியில் சுமார் 60 குரங்குகளுக்கு மர்மநபர் விஷம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் குரங்குகளை கோணிப்பைகளில் கட்டி சக்லேஷ்பூர் – பேகூர் சாலையில் வீசியுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் படி விரைந்து வந்த போலீசார், 60 குரங்களில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 குரங்குகளை உயிருடன் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீதமிருந்த 46 குரங்குகள் உயரிழந்தன. இந்த சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குரங்குகள் சடலங்கள் கொத்து கொத்தாய் சாலையில் வீசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. விலங்குகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை தருவதாக நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 182

0

0