ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…இனி ரயிலில் பாட்டு கேட்டால் ‘அபராதம்’: ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு…!!

Author: Rajesh
22 January 2022, 10:09 am
Quick Share

ரயிலில் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அல்லது சத்தமாக செல்போனில் பேசினாலோ அபராதம் விதிக்கப்படும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்பால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில்வே துறை ரயிலில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் ரயிலில் சத்தமாக பாட்டு கேட்க கூடாது.

செல்போனில் சத்தமாக பேசக்கூடாது என்றும் மீறினால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் விளக்குகள் எரிய கூடாது என்றும் ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளில் தெரிவித்துள்ளது

  • Gold - Updatenews360 தங்கம் விலை சரிந்தது.. நகை வாங்க சரியான நேரம் : இன்றைய விலை நிலவரம்!!
  • Views: - 6586

    0

    0