ஜம்முவில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சூடு: 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்…!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 3:25 pm
Jammu_Encounter_UpdateNews360
Quick Share

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மவட்டத்தில் உள்ள பாடா டூரியான் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்த எண்கவுன்டரில் துப்பாக்கி குண்டுகள் தாக்கியதில் 1 ராணுவ ஜவான் உட்பட 2 போலீசார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பினரும் கடுமையான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதி ஸியா முஸ்தபாவை கொண்டு, பாடா டூரியன் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் மறைவிடத்தை கண்டுபிடிப்பதற்காக ராணுவம் மற்றும் போலீசாrரை உள்ளடக்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று தீவிரவாதிகளின் மறைவிடத்தை நோக்கி நெருங்கும் போது, பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அதில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் ஒரு ஜே.சி.ஓ வீரர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் தீவிரவாதி ஸியா முஸ்தபாவுக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 522

0

0