ஒடிசாவில் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு: இதுவரை 4 பேர் பலி..!!

Author: Aarthi
15 September 2021, 8:32 am
Quick Share

கட்டாக்: ஒடிசாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒடிசா கடலோரம் கடந்து சென்றது. இதில், கடந்த 2 நாட்களில் சராசரியாக 155 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளநீரில் சிக்கி சில கிராமங்கள் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கினால் இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையாளர் பிரதீப் ஜே ஜெனா தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புவனேஸ்வர், கட்டாக், பத்ரக் மற்றும் வேறு சில நகர பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கினால் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Views: - 142

0

0