விளைநிலத்தில் வேலை செய்த போது கனமழை : மின்னல் தாக்கியதில் 4 கூலித்தொழிலாளிகள் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 10:05 am
Lightening Attack - Updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள லிங்கப்பள்ளம் அருகே இடி விழுந்து நான்கு பேர் மரணம் அடைந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லிங்கப்பள்ளம் அருகே உள்ள விளைநிலம் ஒன்றில் விவசாய கூலி தொழிலாளர்கள் எட்டு பேர் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் மீது மின்னல் தாக்கி நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மரணம் அடைந்தனர்.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஏலூரூ அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மரணமடைந்த நான்கு பேர் உடல்களும் ஏலூரூ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

Views: - 226

0

0