தலைநகர் டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழை: கட்டுக்குள் வந்த காற்று தர குறியீடு..!!

Author: Aarthi
1 August 2021, 5:20 pm
Quick Share

புதுடெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கியதுடன், காற்று தர குறியீடும் திருப்தி தரும் வகையில் 50க்குள் வந்துள்ளது.

டெல்லியில் பருவமழை பொழிவை தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று விடுமுறை நாளான இன்றும் காலையில் இருந்தே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாக இருந்தது. எனினும், கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லி முழுவதும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்தது. இதேபோன்று டெல்லியில் காற்று தர குறியீடு அளவும் 48 ஆக உள்ளது.

அரசு தகவலின்படி, காற்று தர குறியீடு அளவு 0-50க்குள் இருப்பது சிறந்தது என்றும், 51-100 திருப்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 401-500 என்பது கடுமையான அளவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 179

0

0