தயார் நிலையில் மும்பை: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகுது…வானிலை மையம் அலர்ட்..!!

19 July 2021, 4:34 pm
Quick Share

மும்பை: மும்பையில் தொடர் கனமழை பெய்து வரும் பெய்து நிலையில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த அடைமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

Mumbai rain - updatenews360

பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல சாலை, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் மும்பை நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கியும் வீடுகள் இடிந்து இடிபாடுகளில் சிக்கியும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

Views: - 136

0

0