லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் கைது..! பாதுகாப்புப் படையினர் அதிரடி..!

6 February 2021, 8:02 pm
kashmir_shelling_updatenews360
Quick Share

லஷ்கர்-இ-முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹிதயத்துல்லா மாலிக் என்பவரை ஜம்மு-காஷ்மீர் போலீசார் இன்று மேற்கொண்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் மூலம் கைது செய்தனர்.

ஜம்மு மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் பாட்டீலின் கூற்றுப்படி, மாலிக் ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என்று தெரிகிறது. மாலிக் ஜம்முவில் உள்ள குஞ்ச்வானியு அருகே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

“ஜம்முவில் உள்ள குஞ்ச்வானி அருகே ஹிதயத்துல்லா மாலிக் என்ற தேடப்படும் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வசம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு மீட்கப்பட்டுள்ளது.

நாங்கள் அவரைக் கைது செய்யச் சென்றபோது, அவர் பாதுகாப்புப் படையினரைத் தாக்கினார்.” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் ஒரு பிரிவுதான் லஷ்கர்-இ-முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பு என ஸ்ரீதர் பாட்டீல் மேலும் கூறினார்

Views: - 0

0

0