தமிழகத்தில் சாலைகள் அமைக்க ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு: 2021-22 பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்..!!

1 February 2021, 12:24 pm
2021-22 budget - updatenews360
Quick Share

புதுடெல்லி: 2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழுக்கத்துக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா தயாராக உள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையில் உற்பத்தி உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு பாதிப்புக்கு இடையே பட்ஜெட்டை தயாரித்துள்ளோம். கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட முன்கள பணியாளர்களுக்குஇ நன்றி.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேவையானவற்றை மோடி அரசு வழங்கியுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.27 லட்சம் கோடி மதிப்புள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். மேலும் பல தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என கூறியுள்ளார்.

2021-22ம் ஆண்டு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

  • கொரோனா பரவலை தடுப்பதற்காக ஜி.டி.பி.யில் 13% ஒதுக்கப்பட்டுள்ளது
  • நாட்டின் பொருளாதார சரிவுக்கு கொரோனாபாதிப்பே காரணம்; பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போதைய பட்ஜெட் உதவும்
  • ரூ.2.87 லட்சம் கோடி செலவில் குடிநீர் வசதியை மேம்படுத்த புதிய திட்டம்; நகர்புற சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.1.41 லட்சம் கோடியில் புதிய திட்டம்
  • கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி செலவிடப்படும். கொரோனா தடுப்பூசிக்காக தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.
  • நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7,400 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன
  • சுகாதாரத்திற்கான செலவினம் 137 அதிகரிக்கப்பட்டுள்ளது
  • 20ஆண்டுகள் பயன்பாட்டில் வாகனங்களை அளிப்பதற்கான தன்னார்வ அடிப்படையிலான திட்டம் செயல்படுத்தப்படும்
  • அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ரூ.5 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும்
  • அடுத்த 3 ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
  • தமிழ்நாட்டில் மதுரை- கொல்லம் இடையே பொருளாதார சாலை அமைக்கப்படும். பொருளாதார சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும். ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு; உற்பத்தித்துறை வளர்ச்சியில் இரட்டை இலக்கை அடைய நடவடிக்கை!
  • தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்
  • நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்; நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்
  • உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
  • மேலும் பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்
  • நாடு முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; நாட்டில் 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும்
  • சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு
  • பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்
  • சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும்
  • கன்னியாகுமரி – கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும்
  • ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்; உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது
  • மின் உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடியில் புதிய திட்டம்
  • காப்பீட்டு முறையில் நேரடி அந்நிய முதலீடு 49%-லிருந்து 74%-ஆக அதிகரிப்பு
  • அரசு வங்கிகளுக்கு கூடுதல் முதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
  • வங்கியின் டெபாசிட் கணக்குகளுக்கு காப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு
  • எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு; பொதுமக்களுக்கு பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிப்பு: மேலும் 2 பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படும்.
  • பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடிவு: 2022 டிசம்பருக்குள் பங்கு விற்பனை இலக்கை எட்ட நடவடிக்கை
  • வேளாண் உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்; நேரடி கொள்முதல் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • விவசாயிகளின் நலனில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என நிர்மலா பேசிய போது இல்லை என எதிர்க்கட்சிகள் முழக்கம்
  • பொது போக்குவரத்து பேருந்து வசதிகளை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி
  • மின் துறைக்கு ரூ. 3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைக்கு ரூ.1500 கோடி
  • காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் திட்டப்பணிகளுக்கு ரூ.2217 கோடி ஒதுக்கீடு
  • சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி கழகத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

Views: - 0

0

0