முஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..!!

Author: Babu Lakshmanan
28 September 2021, 12:39 pm
hyderabad - muslim - hindu attack 1- updatenews360
Quick Share

முஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இந்து இளைஞர் ஒருவர் , பர்தா அணிந்திருந்த இஸ்லாமிய பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவர் செல்லும் வழியில் இஸ்லாமியர்கள் சிலரர் கும்பலமாக நின்றுருந்தனர்.

அந்த சமயம் திடீரென அந்த இளைஞரின் பைக்கை மறித்த அந்த கும்பல், அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த அவருடன் வந்த இஸ்லாமிய பெண், அந்தக் கும்பலுடன் வாக்குவாதம் நடத்தி, அந்த இளைஞரை காப்பாற்ற போராடுகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதக்கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்த இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல டிசிபி கூறியதாவது : அந்த இளைஞரும், பெண்ணும் சென்ற வாகனத்தை ஒரு இஸ்லாமிய நபர் தடுத்து நிறுத்தியுள்ளார். அவருடன் சிலரும் இருந்துள்ளனர். அவர்கள் எல்லோரும் இணைந்து அந்த இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 3 தினங்களுக்கு பிறகு சமூக வலைதளங்களின் மூலம் வெளியே தெரிந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேறு நபர்களையும் தேடி வருகிறோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 162

0

0