ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமியருக்காக தர்ப்பணம் செய்யும் பிராமணர்..! ம.பி.யில் மலரும் மத நல்லிணக்கம்..!

13 September 2020, 8:05 pm
tarpan_hindu_muslim_updatenews360
Quick Share

மதம், சாதி, நிறம் ஆகியவற்றின் எந்த தடையும் நட்பின் பிணைப்பை பாதிக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

பித்ருபக்ஷாவின் பதினைந்து நாட்களில் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் சடங்குகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் மூலம் தங்கள் மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்துகையில், மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஒரு நபர், பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்த தனது நீண்டகால நண்பர் சையத் வாகித் அலிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இதேபோன்ற சடங்குகளை செய்து வருகிறார்.

“சையத் வாகித் அலி சிறுவயதிலிருந்தே எனது சிறந்த நண்பராக இருந்தார். அவர் சாகர் மாவட்டத்தின் கோபால்கஞ்ச் பகுதியில் சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தார்.

பித்ருபக்ஷாவின் பதினைந்து நாட்களில் எனது முன்னோர்களின் தர்பன் செய்வதைப் போல, சையத்துக்கும் தர்ப்பணம் செலுத்தி வருகிறார்.” என சாகர் மாவட்டத்தின் சுர்கி பகுதியில் உள்ள சதுர்பட்டா கிராமத்தில் வசிக்கும் பண்டிட் ராம் நரேஷ் துபே தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும், வயதான பிராமணரான ராம் நரேஷ் துபே தனது முன்னோர்கள் மற்றும் அலியின் படங்களுக்கு முன் சிறப்பு பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் செய்கிறார்.

தெற்கு நோக்கி மேற்கொள்ளப்படும் தர்ப்பணத்தில், முன்னோர்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்கு நீர், பால் மற்றும் கருப்பு எள் விதைகள் படைக்கப்படுகிறது.

“எனது தந்தை நவம்பர் 2017’இல் இறந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது நண்பர் ராம் நரேஷ் துபே, வருகை தருவது மட்டுமல்லாமல், என் தந்தையின் நினைவாக சிறப்பு பிரார்த்தனைகளையும் செய்துள்ளார். இது நம் நாட்டின் மத நல்லிணக்க அடையாளம் மற்றும் கங்கா ஜமுனியின் சிறந்த கலாச்சார எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.” என சையத்தின் மகன் வாஜித் அலி கூறினார்.

Views: - 10

0

0