குறைந்தபட்ச ஆதரவு விலையில் வரலாற்று உயர்வு..! விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி உறுதி..!

24 February 2021, 3:07 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

புதன்கிழமை பிரதமர்-கிசான் திட்ட தொடக்கத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியில் உள்ள பாஜக அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என்று கூறினார்.

தொடர்ச்சியான ட்வீட்டுகளில், பயிர்களை கொள்முதல் செய்வதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) வரலாற்றில் இல்லாத அளவில் திகரிப்பு செய்த பெருமை தனது அரசாங்கத்திற்கு உண்டு என்று பிரதமர் கூறினார்.

“கடந்த ஏழு ஆண்டுகளில், விவசாயத்தை மாற்றுவதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. சிறந்த நீர்ப்பாசனம் முதல் அதிக தொழில்நுட்பம், அதிக கடன் மற்றும் சந்தைகள் முறையான பயிர் காப்பீடு வரை, மண்ணின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இடைத்தரகர்களை அகற்றுவது, முயற்சிகள் அனைத்தையும் உள்ளடக்கியது.” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

“இதே நாளில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பி.எம்-கிசான் திட்டம் கண்ணியமான வாழ்க்கையையும், நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு செழிப்பையும் உறுதிசெய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது. அவர்கள் நம் தேசத்திற்கு உணவளிக்க இரவும் பகலும் உழைக்கிறார்கள். விவசாயிகளின் உறுதியும் ஆர்வமும் தான் நமக்கு ஊக்கமளிக்கின்றது.” என்று அவர் கூறினார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட அனைத்து சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு வருடம் தோறும் ரூ 6000 வருமான ஆதரவை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0