ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைமைத் தளபதி என்கவுண்டரில் பலி..! பாதுகாப்புப் படையினர் அதிரடி..!

1 November 2020, 5:45 pm
Saifullah Mir alias Ghazi Haider_Updatenews360
Quick Share

ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீனின் முதன்மைத் தளபதி டாக்டர் சைபுல்லா கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி கொல்லப்பட்டதாகவும், ரங்கிரெத் பகுதியில் நடந்த மோதலில் ஒரு தீவிரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டுக் குழு ஸ்ரீநகரின் ரங்கிரெத்தில் ஒரு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படைகளின் கூட்டுக் குழு சந்தேகத்திற்கிடமான இடத்தை நெருங்கியபோது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அடுத்தடுத்த தாக்குதலில், சைபுல்லா மிர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் அவரது கூட்டாளிகளில் ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்களும் என்கவுன்டர் இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

சைபுல்லா மிர் அல்லது காசி ஹைதர் அல்லது டாக்டர் சஹாப் என அறியப்படும் இவர் அக்டோபர் 2014’இல் ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் சேர்ந்தார் மற்றும் புல்வாமாவில் உள்ள மலாங்போராவைச் சேர்ந்தவர். அவர் ரியாஸ் நாய்கூவால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு காசி ஹைதர் என்ற பெயரில் செயல்பட்டார்.

இந்த ஆண்டு மே மாதம் நடந்த மோதலில் ரியாஸ் நாய்கூ கொல்லப்பட்ட பின்னர் அவர் ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைமையை ஏற்றுக்கொண்டார்.

சமீபத்தில் பாதுகாப்பு அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட காஷ்மீரில் அதிகம் விரும்பப்பட்ட முதல் 10 பயங்கரவாதிகளின் பட்டியலில் சைபுல்லா முதலிடத்தில் இருந்தார்.

ஒரு பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலை நீக்கிய பாதுகாப்புப் படையினரை வாழ்த்தி, ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், “வாழ்த்துக்கள். ரியாஸ் நாய்கூவின் கொலைக்குப் பின்னர் பொறுப்பேற்ற ஹிஸ்புல்லாவின் தலைமைத் தளபதியும், இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்று பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவருமான சைபுல்லா வீழ்த்தப்பட்டது மிகப் பெரிய வெற்றி.” எனக் கூறியுள்ளார்.

Views: - 21

0

0

1 thought on “ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைமைத் தளபதி என்கவுண்டரில் பலி..! பாதுகாப்புப் படையினர் அதிரடி..!

Comments are closed.