மூச்சுத்திணறல் கோளாறு..! மீண்டும் எய்ம்ஸில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி..!

13 September 2020, 9:24 am
Amit_Shah_UpdateNews360
Quick Share

கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சையைப் பெற்ற பின்னர் ஆகஸ்ட் 31’ஆம் தேதி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திலிருந்து (எய்ம்ஸ்) விடுவிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூச்சுத்திணறல் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததால், மீண்டும் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பல டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், மருத்துவமனை சார்பாகவோ அல்லது உள்துறை அமைச்சகம் சார்பாகவோ எந்த உறுதிப்படுத்தும் அறிக்கையும் வெளியாகவில்லை.

மத்திய அமைச்சர்களில் முதலாவதாக அமித் ஷாவுக்கு ஆகஸ்ட் 2’ஆம் தேதி சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக அகஸ்டா 14’ஆம் தேதி நோய்த்தொற்றிலிருந்து குணமாகி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய மூச்சுத்தி திணறல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்ட அமித் ஷா மீண்டும் ஆகஸ்ட் 18’ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 31’ஆம் தேதி முழுமையாக குணமாகி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று இரவு. வி.வி.ஐ.பி’க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சி.என் டவரில் உள்துறை அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவின் கீழ் ஷா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை இப்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 12

0

0