காதல் மனைவிக்காக மெழுகு சிலை வடித்த கணவர்.! புதுமனை புகுவிழா நடத்தி உருக்கம்.!!(வீடியோ)
11 August 2020, 10:15 amஆந்திரா : ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த காதல் மனைவிக்காக மெழுச்சிலை வடித்து புதுமனை புகுவிழா நடத்திய சம்பவம் உருக வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கோப்பால் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர் தனது காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் அவரை தத்ரூபமாக கொண்டு வர மெழுகுச்சிலை வடித்துள்ளார். அவரது மனைவி 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார்.
மேலும் தான் கட்டிய புதிய வீட்டிற்கு மனைவி வந்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில் புதுமனை புகுவிழாவை நடத்தி அந்த மெழுச்சிலையை வைத்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் படை சூழ அந்த நிகழ்ச்சியில் உண்மையில் அவரது மனைவி அமர்ந்தது போல சிலை வைத்து அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளார். தன் மனைவியின் மீது எல்லையில்லா காதலை நிரூபித்துள்ளார் ஸ்ரீனிவாஸ்.