மனைவியின் சடலத்தை கணவரே தூக்கிச் சென்ற கொடுமை : அரசு மருத்துவமனையில் மீண்டும் அவலம்!!

4 July 2021, 12:25 pm
Man Carry Wife Dead Body- Updatenews360
Quick Share

ஒடிசா : உயிரிழந்த மனைவியின் சடலத்தை கணவரே தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினரான பாலகிருஷ்ணா என்பவரது மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மருத்துவமனை வார்டிலிருந்து வாகனத்திற்கு அவரது உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் யாரும் முன்வராததால் வேறுவழியின்றி பாலகிருஷ்ணன் தனது மனைவியை தூக்கிச் சென்றார்.

இதையடுத்து அவரது தந்தையின் உதவியுடன், அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் மனைவியின் உடலை ஏற்றி வாகனத்திற்கு கொண்டு வந்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 264

0

0