குடும்ப உறுப்பினர்கள் உட்பட 139 ஆண்களால் பாலியல் பலாத்காரம்..! 25 வயதேயான ஹைதராபாத் பெண் பரபரப்புப் புகார்..!

22 August 2020, 12:19 pm
rape_murder_updatenews360
Quick Share

தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர், கடந்த பல ஆண்டுகளில் 139 பேர் மூலம், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தப் பெண் தனது புகாரில் மாணவர் தலைவர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், ஊடக வல்லுநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலரை பெயரிட்டுள்ளார். அந்தப் பெண் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் 42 பக்க எஃப்.ஐ.ஆர் போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து பெற்ற 25 வயது பெண், தான் 2009’ல் திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில், சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட 20 பேர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

விவாகரத்துக்குப் பிறகு, அந்தப் பெண் தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னர், ஏராளமானோர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, காவல்துறையை அணுகினால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

பல சந்தர்ப்பங்களில், தனக்கு சிகரெட் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், பயம் மற்றும் பீதி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, போலீஸ் புகாரை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

புகாரைத் தொடர்ந்து, தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டு, 42 பக்க எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Views: - 0

0

0