மாமியாரோடு சல்லாபத்தில் ஈடுபட்ட மருமகன்..! இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

2 November 2020, 5:47 pm
Murder_UpdateNews360
Quick Share

ஹைதராபாத்தில் 32 வயதான ஒருவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாமியாருடன் கொண்டிருந்த கள்ள உறவை முறித்துக்கொள்ள மருமகன் விரும்பியதால், மாமியாரே கொலை செய்துள்ள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 வயதான மாமியார் தனது மருமகன் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவர் உப்பல் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சில காலம் முன்பு அந்த நபருடன் ஒரு சட்டவிரோத உறவை வளர்த்துக் கொண்ட அந்த பெண், அதைத் தொடர விரும்பி, 2019 நவம்பரில் தனது மூத்த மகளை அந்த நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் பின்னர் அவர்களது கள்ள உறவு பற்றி அறிந்ததும், 19 வயதான மகளுக்கும், கணவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. ஆனால் கணவர் மாமியாருடனான உறவை தொடர்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இது அவரை மேலும் வருத்தப்படுத்தியது. இதையடுத்து மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வழக்கில், அந்தப் பெண்ணும் அவரது மருமகனும் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளனர்.

இதையடுத்து மருமகன் மீண்டும் தனது மாமியாரை சந்தித்து அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பிறகு மனைவியின் மரணத்துக்கும் தன்னுடைய தற்போதைய நிலைக்கும் மாமியார் தான் காரணம் எனக் கூறி மாமியாரை அடித்து துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். 

ஒரு கட்டத்தில் துன்புறுத்தல்களைத் தாங்க கள்ள உறவு வைத்திருந்த மருமகனை கொன்றதாக மாமியார் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Views: - 174

0

0

1 thought on “மாமியாரோடு சல்லாபத்தில் ஈடுபட்ட மருமகன்..! இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

Comments are closed.