“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”..! பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..!
7 March 2021, 5:07 pmபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த மூத்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பேரணியில் உரையாற்றும் போது, “பாதிப்பில்லாத பாம்பாக என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே, நான் ஒரு நாகம், ஒரு கடி கடித்தால் காலி” எனக் கூறினார்.
மிதுன் சக்ரவர்த்தியை பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோர் பாஜகவிற்கு வரவேற்றனர். தேசிய விருது பெற்ற நடிகர், திலீப் கோஷால் பாஜக கொடியை ஒப்படைத்த பின்னர், தாழ்த்தப்பட்டோருக்காக எப்போதும் பணியாற்ற விரும்புவதாகவும், பாஜக தனது எண்ணங்களை நிறைவேற்ற ஒரு தளத்தை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
தான் ஒரு பெங்காலி என்பதில் பெருமைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார். “நான் எப்போதும் வாழ்க்கையில் பெரிய ஒன்றைச் செய்ய விரும்பினேன். ஆனால் உலகின் மிகப் பிரபலமான தலைவர் நரேந்திர மோடியால் உரையாற்றப்படவுள்ள இவ்வளவு பெரிய பேரணியில் ஒரு பகுதியாக இருப்பதை நான் கனவிலும் நினைத்ததில்லை. எங்கள் சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்காக நான் பணியாற்ற விரும்பினேன். அந்த விருப்பம் இப்போது நிறைவேறும்.” என்று அவர் கூறினார்.
முன்னதாக மம்தா பானர்ஜியுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்த மிதுன் சக்ரவர்த்தி, 2014’இல் திரிணாமுல் கட்சியால் மாநிலங்களவை எம்பியாக்கப்பட்டார்.
எனினும், சாரதா பண மோசடி ஊழலில் அவரது பெயர் வெளிவந்ததை அடுத்து, சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி அவர் 2016’இல் எம்பி பதவியிலிருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
0
0