சிக்கக் கூடாது என்பதற்கு வரல.. சிகிச்சைக்காக வந்தேன் : அமெரிக்கா சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி தகவல்..!!

6 June 2021, 6:20 pm
Mehul Sokshi - Updatenews360
Quick Share

வங்கி மோசடி செய்து விட்டு தாம் இந்தியாவில் இருந்து தப்பிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்ததாக இந்தியாவில் இருந்து அமெரிக்க சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்சி இந்தியாவில் இருந்து தப்பி கரீபியன் தீவான ஆன்டிகுவா பார்படாவில் குடியுரிமை பெற்றார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மாயமான அவர் அருகில் உள்ள டொமினிக் தீவில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சோக்சி தாக்கல் செய்த சத்தியபிரமாணத்தில், தாம் இந்தியாவில் இருந்து புறப்படும் போது தம் மீது எந்த வாரண்டும் கிடையாது என்றும் கூறினார்.

பணத்தை வாங்கி கொண்டு தம்மை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும், வங்கி மோசடி செய்து விட்டு தாம் இந்தியாவில் இருந்து தப்பிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

Views: - 248

1

0