“நான் அவளிடம் தோற்றுவிட்டேன்”..! பட்டினிச் சாவுக்கு மகளைப் பறிகொடுத்த தாய் உருக்கம்..!

23 August 2020, 5:54 pm
Village_UpdateNews360
Quick Share

ஆக்ராவின் பரோலி அஹிர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது 5 வயது மகளை பட்டினியால் இழந்த பின்னர் தன்னைத்தானே குற்றம் சாட்டிக் கொண்டார். ஷீலா தேவி என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வேலை கிடைக்காததால், தனது மகளுக்கு உணவு வழங்க முடியாமல் தோல்வியடைந்ததாகக் கூறினார்.

ஆக்ராவில் உள்ள நக்லா விதிச்சந்த் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் கடந்த ஒரு மாதமாக கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருந்தது. கடந்த ஒரு வாரமாக, ஷீலா தேவியின் குடும்பத்திற்கு சாப்பிடக்கூட உணவு இல்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, ஷீலாவின் 5 வயது மகள் சோனியா மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளார். சோனியாவின் மரணத்திற்கு தன்னை பொறுப்பேற்றுக் கொண்ட வேதனைக்குள்ளான தாய், “என்னால் அவளுக்கு எந்த உணவும் கிடைக்க வழிசெய்ய முடியாவில்லை. அவள் பலவீனமாக வளர்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்தது. இப்போது நான் அவளை இழந்துவிட்டேன்” என்று கூறினார்.

குடும்பத்தின் அண்டை வீட்டாரான ஹேமந்த் கௌதம், மாவட்ட அதிகாரிகள் குடும்பத்திற்கு உதவி வழங்கவில்லை என குற்றம் சுமத்தினார். இந்நிலையில், நேற்று உள்ளூர் அதிகாரிகள் இந்த விஷயத்தை ஆராய்வோம் என்று உறுதியளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பிரபு என் சிங், “இந்த வழக்கை துறை அறிந்திருக்கிறது மற்றும் குழந்தையின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்தனர். அதை அவர்கள் செய்யாமல் இருந்திருந்தால், பிரேத பரிசோதனை மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கும்.” எனத் தெரிவித்தார்.

குடும்பத்தின் போராட்டம் வெளிச்சத்துக்கு வந்தபின், உத்தரபிரதேச காங்கிரஸின் செயலாளர் அமித் சிங் அவர்களைச் சந்தித்து, “அவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. ரேஷன் கார்டு இல்லை, எரிவாயு இணைப்பு இல்லை. தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய ரூ 1,000 கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை” எனக் கூறினார்.

Views: - 35

0

0