தெலுங்கானாவில் கொட்டி தீர்க்கும் கனமழை…! வெள்ளத்தில் சிக்கிய 12 பேர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு

16 August 2020, 9:13 pm
Quick Share

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கிய 12 பேர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. ஆகையால் ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் மழை, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இந் நிலையில் பூபாலபள்ளி மாவட்டத்தில் கால்வாய் ஒன்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக அதன் அருகில் உள்ள கிராமங்கள், வயல்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன.

அப்போது வயல்வேலைக்கு சென்ற 12 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் அங்கிருந்து வெளியேற முடிய வில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட முயற்சிக்கு பின்னர் 2 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மாநிலத்தின் பல பகுதிகள் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில்  உள்ள ஏராளமான மக்கள் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Views: - 8

0

0